Monday, April 20, 2009

காதலின் மூன்றாம் விதி


நீ சிரிக்கவே கோமாளியாகிறேன்……..
நீ திட்டவே தவறிழைக்கிறேன்…….
உன் ஆறுதல்களுக்காகவே சோகமாகிறேன்.........
நீ சந்தோசப்படவே நான் சிரிக்கிறேன்........
நீ தடவிக்கொடுக்கவே காயங்கள் ஏற்படுத்திக்கொள்கிறேன்….
நீ கோபப்படவே வம்பிளுக்கிறேன்.......
நீ அணைக்கவே நொந்து போகிறேன்.......
உன் முத்தங்களுக்காவே நான் வெற்றியடைகிறேன்......
உன் கண்ணீருக்காவே நான் தோற்றுப்போகிறேன்....
நீ துடைத்துவிடவே மழையில் நனைகிறேன்....
நீ கனவில் வரவே தூங்குகிறேன்........
நீ கொஞ்சவே நான் குழந்தையாகிறேன்.....
நீ அன்பு காட்டவே நோயாளிகிறேன்.........
உன் செல்லக்கோபங்களுக்காகவே தாமதமாய் வருகிறேன்......
உன் பேரை சொல்லவே கிளி வளர்க்கிறேன்...........
நீ சூடிக்கொள்ளவே ரோஜா வளர்க்கிறேன்.........
உன் செல்ல சிணுங்கல்களுக்காவே கிண்டல் செய்கிறேன்......
உன் அகன்ற விழிகளை ரசிக்கவே அதிர்ச்சியளிக்கிறேன்....
நீ பெறுமிதப்படவே உண்மையாய் இருக்கிறேன்......

செயல்கள் எனதாயினும்
அதை ஆட்டுவிப்பது உன் எதிர் செயல்களதானடி.......

வினைகளுக்கெல்லாம் எதிர்வினையுண்டென்றது
நியூட்டனின் மூன்றாம் விதி

எதிர்வினைகளுக்காவே வினைகளிழைப்பதே
காதலின் மூன்றாம் விதி

காதலின் அகராதி


அமிர்தம்

என்னவள்
இதழ் தொட்ட
விடம் கூட அமிர்தம்தான்

பசி

தலைவலி
காய்ச்சல்
வரிசையில்
எப்போதாவது
எட்டி பார்க்கும்
நோய்

உணவு

அவள் வார்த்தைகளே உணவாயிருக்க
செவிக்கில்லாத பொழுது
சிறிது வயிற்றுக்கு ஈயப்படும்
மருந்து..........
அவளை நினைக்கவாவது
உயிர்வாழ வேண்டி அருந்தும் மருந்து......

முத்தம்

கனவில வாசல்
தலையணைக்கு எதிரி
தாமரையின் சொந்தம்
இதழின் சங்கீதம்
இன்பத்தின் ஆரம்பம்
பல நேரங்களில் சமாதானப்புறா
சில நேரங்களில் சண்டைக்கு விதை
பல நேரங்களில் தூக்க மாத்திரை
சில நேரங்களில் பித்து பிடிக்க வைக்கும் சத்தம்

அலைபேசி

700 கல் தொலைவிலிருந்தாலும்
எட்டி பிடிக்கும் தொலைவில்
என்னவளை கொண்டு வரும் மாயக்கண்ணாடி
சம்பளத்தின் பெரும் பகுதியை விழுங்கி
சன்மானமாய் பல முத்தம் பெற வைக்கும்
என்னவளவின் புகைப்படம் மட்டும் தாங்கி
எப்பொழுதும் என்னுடனையேயிருக்கும்
உடன் பிறவா சகோதரன்.......
ஆயிரம் நிமிடங்களை தாண்டி பேசினாலும்
பேசி முடியா விசயங்களை
நிறைய கேட்டிருக்கும் இக்கருவி.......
அவள் கண்ணீரை
என் கண்ணீரை
என் முத்தங்களை
அவள் முத்தங்களை
எங்கள் அந்தரங்கள் அனைத்தையும்
எங்கள் அனுமதியுடன்
ஒட்டு கேட்கும் கருவி........

தோழி

அன்புக்கு இன்னொரு தாய்
கண்டிக்க இன்னொரு தந்தை
சொந்தம் கொண்டாட இன்னொரு உறவினன்
வழி காட்டும் இன்னொரு ஆசான்
வம்பிலுக்கும் இன்னொரு சகோதரி
முகம் புதைக்க வந்த தலையணை
வருடி செல்லும் இன்னொரு தென்றல்
நான் இருண்ட வேளைகளில் ஒளி கொடுக்கும் மின்னல்
விமர்சிக்க ஒரு விமர்சகன்
என்னை சிரிக்க வைக்கும் இன்னொரு கோமாளி
என்னை அழ வைக்கும் இன்னொரு காதலி
என் செயல்களை கண்காணிக்கும் அந்தரங்க உளவாளி
என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி
நான் சுவாசிக்க வந்த மாற்று ஆக்ஸிஜன்
எனக்கு ஆற்றல் தரும் இரண்டாம் சூரியன்
நான் நடந்து செல்ல போடப்பட்ட பாதை
என் சிலுவைகளை சுமக்கும் என் கர்த்தர்
என்னை சுமக்கும் இரண்டாம் கருவறை
நான் மறைந்து கொள்ளும் மறைவிடம்
நான் வாழ இன்னுமோர் உறைவிடம்
எனக்காக அழும் இன்னொரு வானம்
எனக்காக சிரிக்கும் இன்னொரு நட்சத்திரம்
என்னை உயிர்பிக்கும் சஞ்சீவினி
எனக்காக மட்டும் இறைவம் படைத்த
இன்னொரு உலகமே என் தோழி

Tuesday, April 14, 2009

விரோதி ஆண்டு.............

வா விரோதி ஆண்டே!!!!!!!
வா!!!!!!

நீ
நன்மைக்கு விரோதியாகமால்......
இனப்படுகொலைக்கு விரோதியாய்........
எம் உடன்பிறப்புகளின் உயிரெடுக்கும்
கொடுங்கோலுக்கு விரோதியாய்.......
இருப்பாயா????????????????

நீ வரும் நேரத்தில் பார்
தமிழில் அழுபவரைக்கூட கொல்கிறார்களாம்.........
இக்காலன்களுக்கு காலனாய்.....
இருப்பாயா???

இன்று உயிர் பிழைத்தாகி விட்டோம்.......
நாளை??????????
இன்று நிம்மதியில்லை
நாளையாவது?????????
இன்று பதுங்குக்குழி
நாளை???????
வினவும்
ஒட்டுமொத்த தமிழினத்தின்
கேள்விக்குறிகளுக்கும்
விரோதியாய்.........
இருப்பாயா???

ஆவலில்
ஆனந்த்தில்
உன்னை வரவேறக இயலவில்லை...........
சோகத்தில்
கோபத்தில்
கொடுமையில்
இயலாமையில்
ஆதங்கத்தில்
வரவேர்கிறோம்.......

உன்னிடம் நிறைய கேட்கவில்லை
தாய்மொழியாம் தமிழில்
நிம்மதியாய் அழும்
சுதந்திரத்தையாவது
எம் இனத்திற்கு தந்து விட்டுச்செல்.......

ஆதங்கத்துடன்,

சூரியா