Saturday, December 18, 2010

காதலின் மூன்றாம் விதி

நீ சிரிக்கவே கோமாளியாகிறேன்……..
நீ திட்டவே தவறிழைக்கிறேன்…….
உன் ஆறுதல்களுக்காகவே சோகமாகிறேன்.........
நீ சந்தோசப்படவே நான் சிரிக்கிறேன்........
நீ தடவிக்கொடுக்கவே காயங்கள் ஏற்படுத்திக்கொள்கிறேன்….
நீ கோபப்படவே வம்பிளுக்கிறேன்.......
நீ அணைக்கவே நொந்து போகிறேன்.......
உன் முத்தங்களுக்காவே நான் வெற்றியடைகிறேன்......
உன் கண்ணீருக்காவே நான் தோற்றுப்போகிறேன்....
நீ துடைத்துவிடவே மழையில் நனைகிறேன்....
நீ கனவில் வரவே தூங்குகிறேன்........
நீ கொஞ்சவே நான் குழந்தையாகிறேன்.....
நீ அன்பு காட்டவே நோயாளிகிறேன்.........
உன் செல்லக்கோபங்களுக்காகவே தாமதமாய் வருகிறேன்......
உன் பேரை சொல்லவே கிளி வளர்க்கிறேன்...........
நீ சூடிக்கொள்ளவே ரோஜா வளர்க்கிறேன்.........
உன் செல்ல சிணுங்கல்களுக்காவே கிண்டல் செய்கிறேன்......
உன் அகன்ற விழிகளை ரசிக்கவே அதிர்ச்சியளிக்கிறேன்....
நீ பெறுமிதப்படவே உண்மையாய் இருக்கிறேன்......

செயல்கள் எனதாயினும்
அதை ஆட்டுவிப்பது உன் எதிர் செயல்களதானடி.......

வினைகளுக்கெல்லாம் எதிர்வினையுண்டென்றது
நியூட்டனின் மூன்றாம் விதி

எதிர்வினைகளுக்காவே வினைகளிழைப்பதே
காதலின் மூன்றாம் விதி

Wednesday, August 4, 2010

வரம் கொடு............

லஞ்சம் வாங்காத
அரசு அதிகாரிகள்........
ஊழல் செய்யாத
அரசியல்வாதிகள்...........
அயோகியருக்களுககாக வாதாடாத
வழக்கறிஞர்கள்.........
”உழைத்துதான் பிழைப்பேன”
சொத்தை துறக்கும் முதல்வர் வாரிசு......
மக்களுக்கு சேவை செய்யும்
மந்திரிகள்...............................
பலமுறை மழை கண்டும்
பாழாகாத சாலைகள்..............
பணம்பிடுங்கா மருத்துவமனைகள்.....
இடிந்துவிழா பள்ளிகூடங்கள்....
நன்கொடை வாங்கா கல்விநிலையங்கள்........
உழைப்பிற்கேற்ற ஊதியம் தரும் தொழிலதிபர்கள்.......
ஒழுங்காக வரிகட்டும் மக்கள்......
ஸ்டவ் வெடிக்காத வீடுகள்.......
வரதட்சணை வாங்கா மணமகன்........
மனதில் அன்பை மட்டும் தாங்கும்
காதலிகள்...........
காதலிகளை ஏமாற்றா காதலன்கள்........

இறைவா!
எனக்கு சாபமிட வரம்கொடு.....
மனிதனுக்கு பணத்தாசை என்பதே இல்லாமல் போகட்டும்....

அவருக்குள் ஒருவன்

தீண்டாமை ஒரு பாவச்செயல்...
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்..
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்...
உணர்ச்சி பொங்க......
பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஆசிரியர்!!!!!!!..
தலித்துக்களுக்கு கண்ணாடி டம்ளரில் தேநீர்
கொடுத்தற்கு டீக்கடைகாரரை அடித்த அதே ஆசிரியர்..........

விடியல்

சந்தோசத்துடன் மனதிற்குள் பலமுறைக்கூறிக்கொண்டேன்............
நாளைமுதல் வேலைக்கு போகப்போகிறேன்
பட்டிணத்துக்கு........
அப்பா இறந்தபின் என் அம்மாவின் உழைப்பில்
படித்த நான்...............
கடிகாரமும் மின்சாரமும் கூட இல்லா
என்குடிசையை எப்படி மாற்றுவது?
என்னம்மாவை எப்படியெல்லாம் உபசரிப்பது
என்று யோசித்துக்கொண்டே படுத்திருந்தேன்........
டிவி வாங்கலாம்... ஃப்ரிட்ஜ் வாங்கலாம்...
பெரிய வீடு கட்டலாம்......
என்று யோசித்துக்கொண்டே தூங்க முயற்சி செய்தேன்...
5 மணி பஸ்சை பிடித்தாக வேண்டும்..
உழவன் ஏர் தூக்கும் நேரத்தில் கிளம்பினால்தான்
சாப்பிடும் நேரத்திற்குள் பட்டிணம் போக முடியுமாம்......
என்னை 5 வருடமாக 4 மணிக்கு கூவி கூவி எழுப்பிவிட்ட
ஏழைகளின் கரெண்டில்லா அலாரம்.....
கருப்பு சேவலை நம்பிதான் உறங்கலானேன்....
அதைவிற்றுதான் என் பயணச்செலவிற்காக பணம்
செய்து வைத்திருந்தார் என்னம்மா என்று தெரியாமல்......
சந்தோசத்துடன் உறங்கத்தொடங்கினேன்.....
பொழுது விடியுமா?

தொடுவானம் தூரமில்லை

ஆலையில் வேலைநிறுத்தம் நாலு மாதமாய்....................
வேலையிழந்து அமர்ந்திருந்தேன் உடைந்து போய்.......
இதற்கு மேல் விற்க வீட்டில் ஒன்றுமில்லை........
ஊசி வைக்க இடமின்றி கிழிந்து போயிருந்த 
துணிகள்தான் மீதிருந்தன.......
குழந்தைக்கு எப்படி பசியாற்றுவேன்...........
வீட்டிற்கு என்ன பதில் சொல்வேன்...........
இனி என்ன ஆவேன்?
எங்கு போவேன்????????

எனக்கு நானே உதவ முடியாத சூழலிலும்
உதவிக்கொண்டுதானிருந்தேன்………..
என் வீட்டு அடுப்பில் பூனை குடும்பம்................

சாகதுணிந்தவனில்லை நான்..........
என்னை நம்பி இரண்டு ஜீவனிருக்கிறதே..........
குழம்பித்தான் போயிருந்தேன்...............
20 முறை விழுந்தும்
மீண்டும் எழ முயற்சித்துக்கொண்டுரிந்த 
என் குழந்தையை பார்க்கும் வரை........ 
”முயலும் ஆமையும் இருக்கலாம்
முயலாமை இருக்ககூடாது”
யாரோ சொன்னது உரைத்தது மண்டையில்
என் முகமது கஜினியை எடுத்து உச்சி முகர்ந்து
இதோ கிளம்பிவிட்டேன் மூட்டைதூக்க....
எனக்குள் சொல்லிக்கொண்டேன்......
தொடுவானம் தூரமில்லை.......

தோழமைதினம்தான்.....

படித்த நாட்களில் சந்திக்காமல் இருந்ததில்லை..........
முடித்தபிறகு இது வரை சந்திததில்லை............
நீ எனை பற்றி சிந்திக்கிறாயா என சிந்திததில்லை..............
உனை சந்திக்கும் நாளையே சிந்திக்கிறது 
என் மனம்......

யார் சொன்னது நட்புக்கு இலக்கணம்
பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனுமென்று??????????????
நீயும் நானும்தானென்று சொன்ன பொழுதுகள்
விரிகிறது என் கண் முன்னே.............

கண் முன்னே இருந்த பொழுது உணரமுடியாத நம் நட்பு..............
காணாப்பொழுதில் உண்ர முடிகிறது.........
காற்றால் கூட நம்மை பிரிக்க முடியாது என்ற நாம்
காலத்தின் ஓட்டத்தில் இருக்கிறோம் ஆளுக்கொருபுறமாய்..........

ஆளுக்கொருபுரமாய் அம்மா அப்பா குடும்பம் வேலை பணம் 
என்று இயங்கும் இயந்திர வாழ்க்கைக்கு மத்தியில் 
என்றோ ஒரு நாள் சந்திப்போம்.............
அன்றுதான் விடுமுறை நம் இயந்திர உள்ளங்களுக்கும்
முதிர்ந்த எண்ணங்களுக்கும்..............

பார்த்தவுடன் நம்மை நனைக்க காத்திருக்கும் நம் கண்கள்.........
நம்மை இணைக்க காத்திருக்கும் கைகள்.........
ஆயிரமாயிரம் விசயங்கள் பேச காத்திருக்கும் உதடுகள்.............
அனைத்தும் இயங்கும் அன்று...........
நம் இயந்திரமனதை தவிர..........
மீண்டும் மனிதனாய் நம்மை மாற்றும் அந்நாள் 
வெகு தொலைவிலில்லை நண்பா............ 
அந்நாள் என்னாளாலும் நமக்கு தோழமைதினம்தான்......

கொழுப்பு

அழ வைப்பது அவள் என்று தெரிந்த்தும் ,
அடம்பிடிக்கிறது என் கண்கள்!
அவளைத்தான் காண வேண்டும் என்று!
அதற்கு பெயர்தான் 'கொழுப்பு’!

Saturday, June 26, 2010

google31ee0881d39b486f

google-site-verification: google31ee0881d39b486f.html