Tuesday, January 27, 2009

உடன்பிறப்பு



மனதில் பலநாளாய் உறுத்திக்கொண்டிருப்பதால்
முள்ளெனலாம் என் உணர்வை………

தெருவில் கைகோர்த்து நடக்க....
சிறு சிறு விசயங்களுக்கு சண்டை போட......
அழும் நேரங்களில் சிரிக்க வைக்க......
அயர்ந்து உறங்கும் நேரங்களில் முகத்தில் தண்ணீர் ஊற்ற.....
முதல் தோசைக்காக அடித்துக்கொள்ள........
தேங்காய்நீருக்கு உதைத்துக்கொள்ள......
கீழே விழ வைக்க..........
கீழ் விழும் பொழுது தூக்கிவிட......
அன்புப்பரிசு வாங்கிக்கொடுக்க......
பிறந்தநாளன்று முதல் ஆளாய் வாழ்த்து சொல்ல.......
முதல் ஆளாய் பாராட்ட.......
முதல் ஆளாய் விமர்சனம் செய்ய........
அம்மாவிடம் போட்டுக்கொடுக்க.......
அப்பாவிடம் வக்காலத்து வாங்க......
என் கண்ணைதுடைத்து விட.......
என் கண்ணில் நீர் வரவைக்க.......

அம்மாவாய் அன்புகாட்ட
அப்பாவாய் அறிவுரைக்கூற
ஆசானாய் வழிநடத்த
ஒரு சகோதரனோ சகோதரியோ இல்லை என்பதில்
என் கண்ணில் குற்றால அருவி பொங்கா நாளேயில்லை.....

சிறு வயதில் தோன்றா உணர்வு
தோன்றியது பொறாமையால்தான்
சிறு குழந்தைகள் சகோதரரிடத்தில் சண்டையிடும் பொழுது
இனம் புரியாத உணர்வு கண்ணை மறைக்கும் கண்ணீராய் .....
என் பொறாமையும் வழிந்தோடும் கண்ணீருடன்
இதைதுடைக்கவும் ஆளில்லை என்பதில்
இன்னும் பொங்கும் ஆடி மாதக்காவிரியாய் என் கண்ணீர்.........

எங்க அண்ணனோட ஒரே பிரச்சனைடா எனும் நண்பர்களை நினைத்து சிரித்துக்கொள்வேன்
”ஒன்றின் அருமை அது அகப்படா பொழுதுதான் தெரியும்”