Saturday, December 18, 2010

காதலின் மூன்றாம் விதி

நீ சிரிக்கவே கோமாளியாகிறேன்……..
நீ திட்டவே தவறிழைக்கிறேன்…….
உன் ஆறுதல்களுக்காகவே சோகமாகிறேன்.........
நீ சந்தோசப்படவே நான் சிரிக்கிறேன்........
நீ தடவிக்கொடுக்கவே காயங்கள் ஏற்படுத்திக்கொள்கிறேன்….
நீ கோபப்படவே வம்பிளுக்கிறேன்.......
நீ அணைக்கவே நொந்து போகிறேன்.......
உன் முத்தங்களுக்காவே நான் வெற்றியடைகிறேன்......
உன் கண்ணீருக்காவே நான் தோற்றுப்போகிறேன்....
நீ துடைத்துவிடவே மழையில் நனைகிறேன்....
நீ கனவில் வரவே தூங்குகிறேன்........
நீ கொஞ்சவே நான் குழந்தையாகிறேன்.....
நீ அன்பு காட்டவே நோயாளிகிறேன்.........
உன் செல்லக்கோபங்களுக்காகவே தாமதமாய் வருகிறேன்......
உன் பேரை சொல்லவே கிளி வளர்க்கிறேன்...........
நீ சூடிக்கொள்ளவே ரோஜா வளர்க்கிறேன்.........
உன் செல்ல சிணுங்கல்களுக்காவே கிண்டல் செய்கிறேன்......
உன் அகன்ற விழிகளை ரசிக்கவே அதிர்ச்சியளிக்கிறேன்....
நீ பெறுமிதப்படவே உண்மையாய் இருக்கிறேன்......

செயல்கள் எனதாயினும்
அதை ஆட்டுவிப்பது உன் எதிர் செயல்களதானடி.......

வினைகளுக்கெல்லாம் எதிர்வினையுண்டென்றது
நியூட்டனின் மூன்றாம் விதி

எதிர்வினைகளுக்காவே வினைகளிழைப்பதே
காதலின் மூன்றாம் விதி