Monday, April 20, 2009

காதலின் அகராதி


அமிர்தம்

என்னவள்
இதழ் தொட்ட
விடம் கூட அமிர்தம்தான்

பசி

தலைவலி
காய்ச்சல்
வரிசையில்
எப்போதாவது
எட்டி பார்க்கும்
நோய்

உணவு

அவள் வார்த்தைகளே உணவாயிருக்க
செவிக்கில்லாத பொழுது
சிறிது வயிற்றுக்கு ஈயப்படும்
மருந்து..........
அவளை நினைக்கவாவது
உயிர்வாழ வேண்டி அருந்தும் மருந்து......

முத்தம்

கனவில வாசல்
தலையணைக்கு எதிரி
தாமரையின் சொந்தம்
இதழின் சங்கீதம்
இன்பத்தின் ஆரம்பம்
பல நேரங்களில் சமாதானப்புறா
சில நேரங்களில் சண்டைக்கு விதை
பல நேரங்களில் தூக்க மாத்திரை
சில நேரங்களில் பித்து பிடிக்க வைக்கும் சத்தம்

அலைபேசி

700 கல் தொலைவிலிருந்தாலும்
எட்டி பிடிக்கும் தொலைவில்
என்னவளை கொண்டு வரும் மாயக்கண்ணாடி
சம்பளத்தின் பெரும் பகுதியை விழுங்கி
சன்மானமாய் பல முத்தம் பெற வைக்கும்
என்னவளவின் புகைப்படம் மட்டும் தாங்கி
எப்பொழுதும் என்னுடனையேயிருக்கும்
உடன் பிறவா சகோதரன்.......
ஆயிரம் நிமிடங்களை தாண்டி பேசினாலும்
பேசி முடியா விசயங்களை
நிறைய கேட்டிருக்கும் இக்கருவி.......
அவள் கண்ணீரை
என் கண்ணீரை
என் முத்தங்களை
அவள் முத்தங்களை
எங்கள் அந்தரங்கள் அனைத்தையும்
எங்கள் அனுமதியுடன்
ஒட்டு கேட்கும் கருவி........

No comments: