Monday, February 7, 2011

தலைப்பில்லா கவிதை......

எனக்காக காத்திருந்தாய்
சில மணித்துளிகள்..
உனக்காகவே காத்திருக்கிறேன்
ஒவ்வொரு நிமிடமும்...

எனக்காக அழுதாய்
சில நாட்கள்...
உனக்காகவே அழுகிறேன்
ஒவ்வொரு நாளும்....

கண்கள் இரண்டும் சோர்ந்து போகின்றன
உனை காணாமல்...
கைகள் வலுவிழந்தது
உன் கை பற்றாமல்...
செவிகளிரண்டும்
ஏங்கி நிற்கின்றன உன் குரல் கேளாமல்....

நீ அழைத்தாலே
ஓடி வருவேன் உனை பார்க்க.....
நான் கதறியும்
வரமறுக்கிறாய்
எனை பார்க்க...

நிஜத்தில் வர இயலாவிடினும்
கனவிலேனும் வந்து விடு....

Sunday, February 6, 2011

நீ நான் நிலா..........


1
நிலாவும் பொறாமைப்படுகிறதோ?
உன்னுடன் நான் சேர்ந்த்தில்
பொறுமி பொறுமியே மஞ்சளானதோ…..
இன்று பௌர்ணமி…

2
நீயற்ற எனை
பார்க்க மறுத்தே
மேகங்களுக்குள்
மறைந்து கொள்கிறதடி
நிலா……..


3
நாமிருவரும் சேர்ந்து
நிலாவை ரசித்த நாட்களை
அசை போட்டப்படி உறங்கவில்லை
நீயற்ற இந்நாளில்
நானும் நிலாவும்….

4
நிலவைக்காணவில்லை!!!!!!!!!!
நீயும் நானும் பிரிந்த்தை
கொண்டாடிக்கொண்டிருக்கிறதோ??????
இன்று அமாவாசை.....

5
நீயற்ற நான்
வானமிழந்த நிலா.........

6
நீயும் நானும் சண்டையிட்டது
பகலில்தான் என்றுதான்
பகலவனிடம் ஒளியை
இரவல் பெற மறுக்கிறதோ நிலா....
இன்று அமாவசை

7
நான் இரைத்த கிணற்று நீரில்
நீ முகம் கழுவ
ஒரு நிலாவால் மற்றொன்று சுக்கு நூறானது.........

8
தனை மறைக்க
துள்ளி வரும் மேகங்களை கண்டு
உனை பார்க்கமுடியாதே
எனும் ஏக்கத்தில்
நிலா விடும் கண்ணீரே
இரவு நேரபனித்துளி......

9
கனத்த மழைக்கு பின்
தோன்றும் நிலாவும்
உன் முகமும்
பெரிய மழைத்துளிதான்......

10
நீயற்ற
என் நிலையை
பிரதிபலிக்கத்தான்
அமாவாசையன்று நிலா மறைகிறதடி....

11
நிலாவிலும் உன் முகம் பார்க்கும் ஆசைதான் எனக்கு
அதை மதிக்காது எனை சீண்டும் உன் இரட்டைதான்
மேகத்தினிடையே மறையும் நிலா........

12
உன் நிறத்திற்கு போட்டியாக
நிலாவும் நிறம் மாறும்
நாளே பௌர்ணமி


13

உன் பயணம் தள்ளிப்போக
சாலை மறியலுக்கு நான் ஏங்கியதை
நிலா மட்டுமறியும்.........

14
உன்னிடம் சண்டையிட்ட எனை ஏதோதோ
சொல்லி திட்டுகிறதடி
அசைந்து அசைந்து எரியும் மெழுகுவர்த்தியும்
மறைந்து மறைந்து தோன்றும் நிலாவும்.........

15
நிலவுக்கு விளையாட்டுபுத்திதானடி
பஞ்சுமிட்டாயை ருசிக்கும் குழந்தையின் குதூகலத்தை
பலூனை பார்த்த குழந்தையின் பரவசத்தை
அம்மாவை பார்த்த குழந்தையின் பாசத்தை
நம்மிடம் ரசிக்கத்தான்
மேகங்களுக்குள் மறைந்து மறைந்து வெளிவருகிறதடி நிலா........

16
நீ எழும் நேரத்தையே பிரம்ம முகூர்த்தமாக்கச்சொல்லி
நானும் நிலாவும் பிரம்மனிடம் போடும் சண்டையின்
எதிரொலிதான் சேவலின் கூவல்..........


17
காலை டியூசனுக்கு
உன்னுடன் சேர்ந்து நடக்க
மிதிவண்டியின் சக்கரங்கள் காற்றிழந்ததை
காட்டிக்கொடுக்க நிலா விடும் பெருமூச்சே காலைத்தென்றல்...........

18

நீ நெட்டி முறிப்பதை கண்டு ரசிக்க
என் வீட்டு ஓட்டை பிரிக்கச்சொன்னதே
நிலாதானடி…….

19
நீ விழித்து விட்டதை உணர்த்தும் விதமாய்
சுப்ரபாதத்தை உன் குரலில்
என்னிடம் கொண்டு சேர்க்க
நிலா விடும் பெரிய மூச்சுக்காற்றே
காலை நேரத்தென்றல்…..

20
நீ ஊரிலில்லா செய்தியை வாசித்த
உன் வீட்டு நோஜாவின் மேல்
நானும் நிலாவும் விட்ட கண்ணீரின் சொச்சமே
ரோஜா மீதிருக்கும் பனித்துளி.......

21
நீயற்ற பொழுதுகளில்
நான் விடும் கண்ணீரை துடைக்க
அன்பாய் ஆதரவாய் கரம் நீட்டும் இரவுநேரத்தென்றல்
நிலாவின் மூச்சுக்காற்றுதான்

22
ஊர் குளத்தை நீ ரசிக்கும் சமயங்களில்
உன்னருகில் தனையிருத்தி பார்க்கும் ஆசையில்
எனக்கும் நிலவுக்கும் நடக்கும் ஒலிம்பிக்ஸில்
மேகங்களை தாண்டி தடை தாண்டும் வீரனாய் வெல்லும் நிலா......

23
நீயற்ற எனை பார்த்து
என் கண்ணீருக்காக
நிலா அழுததே நேற்றைய இரவின் மழை

24
உன் பிறந்தநாளுக்காய்
நானுனக்கு கொடுத்த
முத்துமாலைக்கு போட்டியாய்
நிலா வான்பூக்களை கொண்டு பின்னிய மாலையே
7 நட்சத்திட்ர கூட்டம்......

25
நிலவுக்கு வான்
எனக்கு நீ
நீயற்ற எனை கற்பனை செய்வதே கடினம்.......

26
நான்தான் உன் மீது பித்தெடுத்து
உன்னை தொடர்கிறேனென்றால்
நிலவுமா?
நீ போகுமிடமெல்லாம் உன்னை தொடருகிறதே....

27
அழகான உன்முகப்பருக்களுக்கு போட்டியாய்
வானம் வரைந்து கொண்ட பருக்கள்தான்
விண்மீன்களோ??

28
உன் நிழலை தொட நினைத்து
தோற்றுபோய் திரும்பிய எனை
ஆறுதல் படுத்த வந்த தென்றல்
நிலவின் சுவாசக்காற்றுதான்

29
உன் முகத்தை தொட்டுவிட்டு
நிலவை தொட்டுவிட்டதாய்
பீற்றிக்கொண்டதில்
இலவசமாய் கிடைத்த பட்டம்தான் ”பைத்தியம்”

30
எங்கு பார்த்தாலும் உன் முகம் மட்டுமே புலப்படுவதாய்
புலம்பிக்கொண்டிருந்தவனிடம்
உனக்குமா????
என வினவியபடி திருகிறதடி நிலா....

31
நீ ஊரிலற்ற ஓர்நாளில்
ஏக்கத்துடன் நிலவை பார்க்க...
மென்னொளியால்
தன் கண்சிமிட்டி எனை
கேலி செய்கிறதடி நிலா....
எங்கிருந்தாலும் உனை ரசிக்கும்
உரிமை நிலவுக்கு மட்டுமே உண்டாம்....

Saturday, December 18, 2010

காதலின் மூன்றாம் விதி

நீ சிரிக்கவே கோமாளியாகிறேன்……..
நீ திட்டவே தவறிழைக்கிறேன்…….
உன் ஆறுதல்களுக்காகவே சோகமாகிறேன்.........
நீ சந்தோசப்படவே நான் சிரிக்கிறேன்........
நீ தடவிக்கொடுக்கவே காயங்கள் ஏற்படுத்திக்கொள்கிறேன்….
நீ கோபப்படவே வம்பிளுக்கிறேன்.......
நீ அணைக்கவே நொந்து போகிறேன்.......
உன் முத்தங்களுக்காவே நான் வெற்றியடைகிறேன்......
உன் கண்ணீருக்காவே நான் தோற்றுப்போகிறேன்....
நீ துடைத்துவிடவே மழையில் நனைகிறேன்....
நீ கனவில் வரவே தூங்குகிறேன்........
நீ கொஞ்சவே நான் குழந்தையாகிறேன்.....
நீ அன்பு காட்டவே நோயாளிகிறேன்.........
உன் செல்லக்கோபங்களுக்காகவே தாமதமாய் வருகிறேன்......
உன் பேரை சொல்லவே கிளி வளர்க்கிறேன்...........
நீ சூடிக்கொள்ளவே ரோஜா வளர்க்கிறேன்.........
உன் செல்ல சிணுங்கல்களுக்காவே கிண்டல் செய்கிறேன்......
உன் அகன்ற விழிகளை ரசிக்கவே அதிர்ச்சியளிக்கிறேன்....
நீ பெறுமிதப்படவே உண்மையாய் இருக்கிறேன்......

செயல்கள் எனதாயினும்
அதை ஆட்டுவிப்பது உன் எதிர் செயல்களதானடி.......

வினைகளுக்கெல்லாம் எதிர்வினையுண்டென்றது
நியூட்டனின் மூன்றாம் விதி

எதிர்வினைகளுக்காவே வினைகளிழைப்பதே
காதலின் மூன்றாம் விதி

Wednesday, August 4, 2010

வரம் கொடு............

லஞ்சம் வாங்காத
அரசு அதிகாரிகள்........
ஊழல் செய்யாத
அரசியல்வாதிகள்...........
அயோகியருக்களுககாக வாதாடாத
வழக்கறிஞர்கள்.........
”உழைத்துதான் பிழைப்பேன”
சொத்தை துறக்கும் முதல்வர் வாரிசு......
மக்களுக்கு சேவை செய்யும்
மந்திரிகள்...............................
பலமுறை மழை கண்டும்
பாழாகாத சாலைகள்..............
பணம்பிடுங்கா மருத்துவமனைகள்.....
இடிந்துவிழா பள்ளிகூடங்கள்....
நன்கொடை வாங்கா கல்விநிலையங்கள்........
உழைப்பிற்கேற்ற ஊதியம் தரும் தொழிலதிபர்கள்.......
ஒழுங்காக வரிகட்டும் மக்கள்......
ஸ்டவ் வெடிக்காத வீடுகள்.......
வரதட்சணை வாங்கா மணமகன்........
மனதில் அன்பை மட்டும் தாங்கும்
காதலிகள்...........
காதலிகளை ஏமாற்றா காதலன்கள்........

இறைவா!
எனக்கு சாபமிட வரம்கொடு.....
மனிதனுக்கு பணத்தாசை என்பதே இல்லாமல் போகட்டும்....

அவருக்குள் ஒருவன்

தீண்டாமை ஒரு பாவச்செயல்...
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்..
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்...
உணர்ச்சி பொங்க......
பாடம் நடத்திக்கொண்டிருந்தார் ஆசிரியர்!!!!!!!..
தலித்துக்களுக்கு கண்ணாடி டம்ளரில் தேநீர்
கொடுத்தற்கு டீக்கடைகாரரை அடித்த அதே ஆசிரியர்..........