Wednesday, August 4, 2010

தொடுவானம் தூரமில்லை

ஆலையில் வேலைநிறுத்தம் நாலு மாதமாய்....................
வேலையிழந்து அமர்ந்திருந்தேன் உடைந்து போய்.......
இதற்கு மேல் விற்க வீட்டில் ஒன்றுமில்லை........
ஊசி வைக்க இடமின்றி கிழிந்து போயிருந்த 
துணிகள்தான் மீதிருந்தன.......
குழந்தைக்கு எப்படி பசியாற்றுவேன்...........
வீட்டிற்கு என்ன பதில் சொல்வேன்...........
இனி என்ன ஆவேன்?
எங்கு போவேன்????????

எனக்கு நானே உதவ முடியாத சூழலிலும்
உதவிக்கொண்டுதானிருந்தேன்………..
என் வீட்டு அடுப்பில் பூனை குடும்பம்................

சாகதுணிந்தவனில்லை நான்..........
என்னை நம்பி இரண்டு ஜீவனிருக்கிறதே..........
குழம்பித்தான் போயிருந்தேன்...............
20 முறை விழுந்தும்
மீண்டும் எழ முயற்சித்துக்கொண்டுரிந்த 
என் குழந்தையை பார்க்கும் வரை........ 
”முயலும் ஆமையும் இருக்கலாம்
முயலாமை இருக்ககூடாது”
யாரோ சொன்னது உரைத்தது மண்டையில்
என் முகமது கஜினியை எடுத்து உச்சி முகர்ந்து
இதோ கிளம்பிவிட்டேன் மூட்டைதூக்க....
எனக்குள் சொல்லிக்கொண்டேன்......
தொடுவானம் தூரமில்லை.......

No comments: